Connect with us

கமலஹாசனின் புரியாத கவிதை: நெட்டிசன்கள் கிண்டல்

News

கமலஹாசனின் புரியாத கவிதை: நெட்டிசன்கள் கிண்டல்


440a52ef90cef850fb508044fe33a4e7

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு டுவீட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவ்வப்போது சில புரியாத டுவிட்டுக்களையும் அவர் பதிவு செய்வார் என்பது தெரிந்ததே, அந்த வகையில் சற்று முன்னர் அவர் ஒரு கவிதையை பதிவு செய்துள்ளார். இந்த கவிதையில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை

ஒரு சிலர் இது வனிதா பிரச்சனை என்றும் ஒரு சிலர் இது கந்தசஷ்டி கவசம் பிரச்சனை என்றும் கூறி வந்தாலும் இதில் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்பதை கமலஹாசனே மீண்டும் ஒரு முறை விளக்கம் அளித்து ஒரு ட்வீட் போட்டால் மட்டுமே அனைவருக்கும் புரியும் என்பது குறிப்பிடத்தக்கது

கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்த கவிதை: வியக்காதீர், தோழர்களே! மனித நேயம் என்பது விபரீத குணமுள்ளது. வெட்டிக்கொல்லலத் துணியும் சகோதரப் போரில்- புகுந்து தவிர்க்கும் தாய்மையே வெல்லும். அத்தகைய அன்பு வேண்டாமா நமக்கு?

பாவமும் புண்ணியமும் ஒருவரை ஒருவர்- நாம் தின்று கொழுத்த பின், யாமையே யாம் தினல் கேவலம் என்று நாம் உணர்ந்த பின் விடிந்ததால்- உதித்தது இவ்வுலகு.

நாம் கற்பித்த நாய்கட்கும் ஒரு தனி வீரமுண்டு. வேங்கைப்புலிக்கும் முதலைக்கும் அது உண்டு. அது சமீப காலத்து சான்றோர் அவையில்- மிருக உறுமலின்று வேற என்ன தோழா? உன்னை நான் சாடுவேன்- என்னை நீ ஏசுவாய். இருப்பினும்- அமர்ந்து நாம் உயிர்பலி தவிர்ப்பதே கடமையாகக் கொண்ட ஒரு குடும்பமன்றோ!

இதில் விடுபடும் சோதரன் மீண்டு வருவான். அவன் வரும் வரை அவன் செய்த சேதங்கள் சீர் செய்வதென்பது தகப்பனாய் தோழனாய் என் கடமையன்றோ! மன்னித்து அருள்கவென அவனுக்கும் முன்னால் நின்று கேட்பதே நம்மறிவின் உச்சம். பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு?

இந்த கவிதையில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மீண்டும் அவரே விளக்கினால் தான் புரியும். கந்த சஷ்டி கவசம் பிரச்சனை, வனிதா பிரச்சனை என தற்போது பரபரப்பாகி கொண்டிருக்கும் பிரச்சனையை தான் அவர் சொல்லியிருக்கின்றார் என்று சிலர் கூறியுள்ளார்கள். உங்களுக்கு புரிந்தால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கமெண்ட் பாக்ஸில் கருத்து தெரிவியுங்கள்

0adf68695ebcfff690d441c5807d7573
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top