டெல்லியை அடைந்தது ராகுல் காந்தியின் பயணம்.. கமல்ஹாசன் திட்டம் என்ன?

ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் என்பதும் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த பயணம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்து இன்று டெல்லியை வந்தடைகிறது.

ராகுல்காந்தியின் ஒற்றுமைப் பயணம் டெல்லிக்கு வருவதை அடுத்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மூலம் அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ள வைப்பதாகவும் அவர் ராகுல் காந்தியுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று திமுக எம்பி கனிமொழி ராகுல் காந்தியின் பயணத்தில் கலந்து கொண்ட நிலையில் இன்று கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.