கமல்ஹாசனின் ‘விக்ரம்’ புதிய டீசர் வெளியீடு

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ‘விக்ரம்’ படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது

இந்த டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கமல்ஹாசனின் சூப்பர் ஆக்ஷன் காட்சிகள் ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசரை கமல் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில், ஷிவானி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print