மருத்துவமனையில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா கமல்ஹாசன்?

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவமனையில் இருந்து இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என செய்திகள் கசிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதன் காரணமாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு பதில் வேறு யாரேனும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தற்காலிகமாக தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்னும் ஒரு சில வாரங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் இதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வாரம் உள்பட இன்னும் ஒரு சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா? அல்லது வேறு யாரேனும் தொகுத்து வழங்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment