பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுடன் தொகுத்து வழங்கும் பிரபல நடிகை!

கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதனால் அவருக்கு பதிலாக வேறு யாராவது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டது.

குறிப்பாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவர் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நேற்று வெளியான தகவலின்படி இந்த நிகழ்ச்சியை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்றும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் கமல்ஹாசனே மருத்துவமனையிலிருந்து தொகுத்து வழங்கினார் என்பதும் அவருக்கு உதவியாக ஸ்டூடியோவில் இருந்து ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் விரைவில் குணமாக ராஜூ வாழ்த்து தெரிவிக்கும் காட்சியும் இன்றைய முதல் வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment