கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கமல்ஹாசன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்: இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது: அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விரைவில் முழு குணமாகி வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment