Connect with us

OTT – யிலும் 3 சாதனைகளை தட்டி தூக்கிய விக்ரம் படம்!

vikram movie

பொழுதுபோக்கு

OTT – யிலும் 3 சாதனைகளை தட்டி தூக்கிய விக்ரம் படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளிவந்தது. இப்படம் வெளிவந்த நாள் முதல்இன்று வரை ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் நிறைந்த காட்சிகளாக வளம் வந்து வசூலை குவித்தது.

vijay sethupathi - vikram

வெளியான 11 நாள்களில் ரூ. 300 கோடி வசூலை அள்ளியது மட்டுமல்லாமல் தற்போது உலக அளவில் ரூ. 425 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. கமல் ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலைக் ஈட்டிய படம் என்கிற பெருமையை விக்ரம் பெற்றுள்ளது.

vikramm 2

தமிழ்நாட்டில் மட்டும் விக்ரம் படத்தின் வசூல் ரூ. 150 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூலைக் ஈட்டிய தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் விக்ரம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டிய படமாக கேஜிஎஃப் 2 இருந்தது. அதன் வசூலை விக்ரம் தாண்டியுள்ளதாகக் தகவல் வெளிவந்துள்ளது.

vikram movie review out 02

இதனை அடுத்து கடந்த வாரம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் விக்ரம் படம் வெளியாகியது. ஆனால் அப்போது கூட திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து ஓடிடி வெளியீட்டிலும் புதிய சாதனை படைத்துள்ளது விக்ரம் திரைப்படம். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வார இறுதியில் அதிகம் பேர் பார்த்த படம், அதிக சந்தாதாரர்கள், அதிக நேரம் பார்த்தது என மூன்று புதிய சாதனைகளை விக்ரம் படம் நிகழ்த்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top