News
கமலஹாசனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது
கமலஹாசனுக்கு சில நாட்களுக்கு முன் ஒரு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த வேதனையுடனே பல்வேறு ஊர்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் செய்து வந்தார் கமல். கடும் வேதனையுடனே தான் பயணித்ததாக கமல் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருந்தார்.
கமலுக்கு மற்றொரு காலிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறி இருந்தனர். அதன்படி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் நேற்று சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தி முடிக்கப்பட்டது.
இது குறித்து கமலின் மகள்களும் நடிகைகளுமான ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அப்பாவுக்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார். நான்கைந்து நாட்களுக்கு பிறகு அப்பா வீடு திரும்புவார் என கூறியுள்ளனர்.
