Connect with us

சாரி தம்பி சார்!! சூர்யாவுக்கு தம்பி என கமல்ஹாசன் பதில் டுவீட்…

Kamals

பொழுதுபோக்கு

சாரி தம்பி சார்!! சூர்யாவுக்கு தம்பி என கமல்ஹாசன் பதில் டுவீட்…

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் விஸ்வரூபடம் 2 படத்திற்கு பின்னர் 4 ஆண்டுகள் கழித்து விக்ரம் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் பட ஸ்டைலில் நடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விக்ரம் படத்தில் தங்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக கமல்ஹாசனுக்கு சூர்யா நன்றி தெரிவித்திருந்தார்.

இதற்கு அன்பு தம்பி என பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன்
இறுதியாக வாழ்த்துக்கள் தம்பி எனக்கூறிவிட்டு பின்னர் விக்ரம் ஸ்டைலில் சாரி தம்பி சார் என பதிவிட்டார். இதற்கு சிரித்தபடி அண்ணா என்ன சூர்யா பதில் அளித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், நடிகர் கமலின் விக்ரம் படம் ஹிட் கொடுத்தால் அடுத்தாக மலையாளத்தில் சமீபத்தில் வெற்றி கொடுத்த மாலிக், நயட்டு, சி யூ சூன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் கமல்ஹாசனை வைத்து புதிய படம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top