இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த கமல்ஹாசன்: வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடித்த 90-களில் வெளியான படம் இந்தியன். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் ஷங்கர் இயக்கும் திட்டமிட்டுள்ளார்.

அதன் படி, 2-ம் பாகத்தில் கமல்ஹாஸனே நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினிமா படப்பிடிப்பு, சூட்டிங் விபத்து போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட லைக்கா நிறுவனம் இயக்குனர் சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும், படத்திற்கான பூஜையையும் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இந்த சூழலில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும், படப்பிடிப்பு தளத்தில்  நடிகர் கமல்ஹாசன்  இயக்குனர் ஷங்கருடன் பேசும் வீடியோவானது வைரலாகி வருகிறது.

மேலும், இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக நடிகை காஜல் அகர்வால் குதிரைமேல் அமர்ந்து பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment