
Entertainment
ராஜமௌலி உடன் இணையும் கமல்ஹாசன்.. வெளியான மாஸ் தகவல்!!.
கமலின் விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய தற்போது கமல்ஹாசன் புரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக பிரபல யூடியூப் சேனல் ஆன வில்லேஜ் குகிங் சேனல் விக்ரம் பட புரமோஷனுக்காக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் விக்ரம் படத்திற்கு பிறகு அடுத்து யாருடன் கமலஹாசன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பா ரஞ்சித் அடுத்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
அவரது திரைப்படமானது மதுரையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு திரைப்படமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. பாகுபலி மற்றும் RRR போன்ற மிகப்பெரிய பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்த RRR திரைப்படத்தை உலகம் முழுவதும் மிகப் பெரிய ஹிட்டானது 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சண்டைகோழி ஹீரோயினா இது !! இந்த வயதிலும் கிளாமர் அள்ளுதே ??
