Entertainment
கமல் ஹாசனால் வாயடைத்துப் போன கவின்!!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது, காதல்- பாசம்- சண்டை- ரொமான்ஸ் என ஒரு திரைப்படம்போல சென்று கொண்டிருக்கிறது.
வார இறுதியான நேற்று கமல்ஹாசன் வருகை புரிந்தார், அறிமுகம் மிக வித்தியாசமான முறையில் இருந்தது, அதாவது 60 கேமராக்களைக் கண்காணிக்கும் அறையில் இருந்தவாறு மக்களை வரவேற்றார்.

அதன் பிறகு பைக் மாடல் டாஸ்க் நடந்தது. இறுதியில், இந்த டாஸ்க்கில் தர்ஷன் வெற்றி பெற்றார், அதனால் சாண்டியைக் கடிந்து கொண்டதோடு அறிவுரை கூறினார்.
ஒரு நாள் இரவில் விளக்கை அணைத்தபின்னும் கவினும் லோஸ்லியாவும் பேசிக் கொண்டிருந்தனர். மைக்கில் உள்ள ஏதோ ஒரு ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிட்டு பேசிய கவின் அதனை லோஸ்லியாவுக்கும் கற்றுக் கொடுத்தார். லோஸ்லியாவும் ஸ்விட்ச்சை ஆஃப் செய்துவிட்டு இருக்க, அப்போது கவின் லோஸ்லியா காதருகே வந்து ஏதோ முணுக்கவே செய்துள்ளார்.
ஆங்கிலம் பேசியது தவறு என்று தெரிந்த உங்களுக்கு இது தவறாக தெரியவில்லையா? இல்லை. இது விதிமீறல் இல்லை என்று நினைக்கிறீர்களா? என்று கமல்ஹாசன் கேட்க வாயடைத்துப் போனார் கவின்.
கமல் ஹாசன் முன் அமைதியாவதும், அதன்பின்னர் வாயாடுவதும்தான் கவினின் எப்போதைய வழக்கம் என்பது அனைவரும் அறிந்ததே ஆகும். லாஸ்லியாவோ சிரித்தே மழுப்பினார்.
