Connect with us

என்னது! ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கமல்ஹாசன்? – இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே;;

ponniyin selvan movie official release date announed photos pictures stills

பொழுதுபோக்கு

என்னது! ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கமல்ஹாசன்? – இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே;;

மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே படம் தொடங்கும்போது கமல்ஹாசனின் குரலுடன் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்துவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவர் டப்பிங் கொடுத்து முடித்துவிட்டதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top