Connect with us

இந்தியன் 2 படத்திற்காக அமெரிக்கா செல்லும் கமல்ஹாசன்? படப்பிடிப்பு எப்போ தெரியுமா ?

indian2 1 1596707504 1620644050 1

பொழுதுபோக்கு

இந்தியன் 2 படத்திற்காக அமெரிக்கா செல்லும் கமல்ஹாசன்? படப்பிடிப்பு எப்போ தெரியுமா ?

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம், இந்த படம் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்துள்ளது. அதை தொடர்ந்து கமல் அடுத்து இந்த படத்தில் நடிப்பார் என அவரது ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

Indian2 1

கமலின் மிரட்டலான நடிப்பை மீண்டும் பார்த்து ரசிகர்கள், அடுத்ததாக கமலின் இந்தியன் 2 படம் குறித்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சில விபத்து மற்றும் கொரோனா தாக்கம் காரணங்களால் பாதியிலையே நிறுத்தப்பட்டது.

இதில் கமலஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. article image 1

படத்தின் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.தற்போழுது கிடைத்ர்த்த தகவலின் படி கமல் தற்போழுது இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக அமேரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 ல் வயதான கெட்அப் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக டாப் மேக்அப் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தான் கமல் அமெரிக்கா சென்றுள்ளார். கமல் குறைந்தது 3 வாரங்கள் அங்கு தங்க போவதாகவும், அதற்கு பிறகு இந்தியா வந்து செப்டம்பர் மாதத்தில் இந்தியன் 2 ஷுட்டிங்கை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியுடன் கைகோர்க்க நினைக்கும் டான் ஹீரோ! படம் அப்போ தரமான சம்பவமா இருக்குமே!

இதனால் இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு கமல், மகேஷ் நாராயணன் படத்திற்கு தயாராவார் என தகவல் கிடைத்துள்ளது. அனிருத் இசையைமக்கும் இந்தியன் 2 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க இந்த படத்தில் பிரியா பவானிசங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top