லைட் பாய் திட்டியதால் சிகரெட் பழக்கத்தை கைவிட்ட கமல்……

பொதுவாக நடிகர்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை என்றாலும் படங்களில் அதுபோன்ற காட்சிகள் வந்தால் சிகரெட் பிடித்து தான் ஆகவேண்டும். இருப்பினும் சில நடிகர்கள் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவராக இருப்பார்கள். அந்த வகையில் தான் சிகரெட் பழக்கத்தை கைவிட்ட காரணத்தை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கமல்

அதன்படி நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இருவரும் பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், “அவ்வை சண்முகி படப்பிடிப்பின்போது நான் சிகரெட் பிடித்தேன். அதை பார்த்த என் நண்பர்கள் என்னை தனியாக அழைத்து கமல் சார் ஷூட்டிங்கில் நீ இப்படி செய்வது சரியில்லை என்று கூறி ஒருத்தன் என்னை அடிக்கவே வந்துட்டான்.

அப்போல இருந்து நான் சிகரெட் பழக்கத்தை விட்டுட்டேன். இதுக்கு முழு காரணம் கமல்சார் தான்” என கூறினார். உடனே குறுக்கிட்டு பேசிய கமல், “நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். மீசையும் சிகரெட்டும் ஒன்றாக வளரும் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரம் அது.

அப்போது நான் சிகரெட் பிடிப்பதை பார்த்த ஒரு லைட்மேன் சிகரெட்டை பிடுங்கி அடி திருப்பி விடுவேன். இப்பதான் உன்னை அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பார்த்த மாதிரி இருக்கு இந்த வயதில் உனக்கு சிகரெட் பழக்கமா? என்று திட்டினார். சினிமாவில் அனைவர் முன்னிலையிலும் வளர்ந்ததால் என்னால் மறைந்து மறைந்து சிகரெட் பிடிக்க முடியவில்லை.

சுதந்திரமாக சிகரெட் பிடிக்கும் ஒரே இடம் கழிவறைதான். ஆனால் கழிவறை சென்று சிகரெட் பிடிக்க வேண்டுமா என்று யோசித்து அந்த பழக்கத்தையே விட்டுவிட்டேன்” என கூறியுள்ளார். நடிகர் கமல் கூறியுள்ள இந்த சுவாரஸ்யமான தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment