Entertainment
கமல் ரசிகர்களால் வைரல் ஆகும் 31 வருட சேலஞ்ச்
கடந்த 1988ம் ஆண்டு வந்த படம் சூரசம்ஹாரம். இதில் கமல் அதிவீரபாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் நடித்திருந்தார். இப்படம் வந்து 31 வருடங்கள் ஆகிய நிலையில் கமல் ரசிகர்களால் இந்த புகைப்படம் அதிக அளவில் இணையங்களில் பகிரப்படுகிறது.

இந்த படத்தில் கமல் சாதாரண சட்டையுடன் டை கட்டியபடி நடித்திருப்பார். இது போல ஒரு வேடத்தில் சமீபத்தில் இவர் பிக்பாஸில் தோன்றியதால் 31 வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கமலின் அப்போதைய கெட் அப்பையும் தற்போதைய கெட் அப்பையும் ஒப்பிட்டு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிகின்றனர்.
அப்போதும் இப்போதும் கம்பீரம். என்ற வகையில் டுவிட் செய்து வருகின்றனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இந்த படம் தற்போது சுற்றி வருகிறது.
