கமல் டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு!!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமாக இருப்பவர் கமல்ஹாசன். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பிய தாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சூழலில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

FiUshYbakAEeRj7

அதில் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது படிபடியாக குணமாகி வருவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று நிர்வாகம் கூறியுள்ளது.

இத்தகைய தகவலை கேட்ட அவருடைய ரசிகர்கள் நடிகர் கமல்ஹாசன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.