Connect with us

பிக்பாஸ் 4 அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்: வைரலாகும் வீடியோ

Entertainment

பிக்பாஸ் 4 அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன்: வைரலாகும் வீடியோ

8d51b9c9cedc7b02f28abd402c3e992f

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும், இந்த நிகழ்ச்சி அடுத்த மாதமே தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது தெரிந்தது

இந்த நிலையில் சற்று முன்னர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த உலகமே ஒரு சின்ன கிராமம் என்பதை கொரோனா வைரஸ் நமக்கு உயர்த்திவிட்டது உணர்த்தி விட்டது. இந்த நோய் கிருமியால் அனைவரும் தற்போது வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும் எத்தனை நாளைக்கு முடங்கிக் கிடப்பது?

நாம் பாதுகாப்புடன் மீண்டும் வேலையை தொடங்கவேண்டும். உலக சுகாதார மையம் ஏற்கனவே பாதுகாப்புடன் வேலையை செய்யுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன் படி நாமும் களத்தில் இறங்குவோம். நம்மை நம்பி இருப்பவர்களை நாம் கண்டிப்பாக காப்பாற்றியாக வேலை செய்தே ஆகவேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்

மேலும் இதோ நான் என்னுடைய வேலையை தொடங்கி விட்டேன் என்று கூறி பிக்பாஸ் 4’ நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top