Entertainment
கமல்ஹாசன் உதவியே செய்யலையா- ஆதாரத்துடன் நிரூபிக்கும் ரசிகர்கள்
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து சிறப்பாக அதை செயல்படுத்தி வரும் நிலையில் அவர் வெகுஜன மக்களுக்கு நிதியுதவி போன்று எதுவும் செய்ததில்லை என பரவலாக சில பேச்சு உள்ளது.

இதை அவரது ரசிகர்கள் மறுத்து வருகின்றனர். முதன் முதலில் தனது ரசிகர்களை ரத்ததானம் செய்ய வைத்தது கமல்தான் என்றும் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றியது கமல் தான் என்றும் கூறி வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் கமல் எந்த எந்த படத்தில் வந்த நிதியை எது எதற்கு உபயோகப்படுத்தினார் என பெரிய லிஸ்டையே ஒரு ரசிகர் கொடுத்துள்ளார்.
