உலகநாயகன் கமலுக்கும் ஜானகி என்ற பெயருக்கும் இத்தனை பொருத்தமா? யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க..

பொதுவாகவே உலக நாயகன் கமல்ஹாசன் படங்கள் என்றாலே நடிப்பு என்பதையும் தாண்டி குறியீடுகள், வசனங்கள் என அனைத்துமே ஏதாவது ஒரு விஷயத்தை படம் முழுக்க சொல்லிக் கொண்டே வரும். அது காமெடிப் படமாக இருந்தாலும் சரி..சீரியஸ் படமாக இருந்தாலும் சரி.. இப்படி கமல்ஹாசனுடன் காமெடிப் படங்களில் இணைந்து தங்களுக்கென தனி பாதையை உருவாக்கியவர்கள்தான் கமல்-கிரேஸி மோகன் கூட்டணி. ஹியூமர் காமெடி பண்ண வேண்டுமா இவர்கள் இணைந்து உருவாக்கிய படங்களைப் பார்த்தாலே போதும் படம் முழுக்க சொல்லாமலே எதேச்சையாக நிறைய ஹியூமர் நிறைந்திருக்கும்.

அப்படி இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய படங்களைக் கவனித்தோம் என்றால் அதில் ஒரு பெயரானது திரும்பத் திரும்ப வரும். அந்தப் பெயர் தான் ஜானகி. ஏற்கனவே பாடகி எஸ்.ஜானகியுடன் இணைந்து கமல் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் இது வேறு ஜானகி. ஆம் கிரேஸி மோகன் வசனங்களில் கமல் நடித்த அனைத்துக் கதாநாயகிகளின் பெயர்களும் ஜானகி என்ற பெயரில்தான் வருவார்கள். எப்படி நடிகர் ஜெய்சங்கர் நிறைய படங்களில் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் வருவாரோ அதேபோல் ஜானகி என்ற பெயரில் அப்படி ஒரு ராசி உள்ளது போலும். மேலும் மைதிலி என்ற பெயரும் அதிகமாக இடம்பெறும்.

நான் மனதார மிகப்பெரிய நடிகர்களாக ஏற்றுக் கொண்டது இவ்விருவரைத் தான்… நடிகர் சிவக்குமார் பகிர்வு…

உதாரணமாக அவ்வை சண்முகம் திரைப்படத்தில் மீனாவின் பெயர் ஜானகி, அபூர்வ சகோதரர்கள் படத்தில் கௌதமியின் பெயர் ஜானகி, காதலா காதலா படத்தில் ரம்பாவின் பெயர் ஜானகி, வசூல்ராஜா படத்தில் சினேகாவின் பெயர் ஜானகி, தெனாலி படத்தில் ஜோதிகாவின் பெயர் ஜானகி, பம்மல் கே சம்பந்தம் படத்தில் சிம்ரன் பெயர் மைதிலி. எப்படி ஓர் ஒற்றுமை பாருங்கள். ஒரே பெயரையே அத்தனை ஹீரோயின்களுக்கும் சூட்டி அதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர் கமல்-கிரேஸி கூட்டணி.

ஏன் இந்தப் பெயர்களை வைத்திருக்கிறார்கள் தெரியுமா? கிரேஸி மோகனுக்கு பள்ளிப் பருவத்தில் மைதிலி, ஜானகி என்ற இரண்டு ஆசிரியர்களின் பெயர்களையே தனது கதாபாத்திரங்களுக்கும் சூட்டியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews