Connect with us

ரஜினிக்கு பதில் கமல், கூடுதலாக ஒரு கோடி சம்பளம்: லோகேஷ் கனகராஜூக்கு அடித்த அதிர்ஷ்டம்

Entertainment

ரஜினிக்கு பதில் கமல், கூடுதலாக ஒரு கோடி சம்பளம்: லோகேஷ் கனகராஜூக்கு அடித்த அதிர்ஷ்டம்

e0179f36468f1e681ec885edb136aa25

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

ஆனால் திடீர் திருப்பமாக இந்த படத்தில் நடிக்க முடியாது என ரஜினிகாந்த் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து ரஜினிக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கதையில் தானே நடிக்க கமல் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது

இதற்காக பேசிய தொகையை விட லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு கோடி அதிகம் சம்பளம் தர கமல் முன் வந்து இருப்பதாகவும் தனக்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

எனவே ரஜினி நடிக்கவிருந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார் என்றும் லோகேஷ் கனகராஜ் அந்த படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ‘தலைவன் இருக்கின்றான்’ பட வேலையையும் கமல்ஹாசன் தொடங்கிவிட்டதாகவும், பாதியில் நிற்கும் சபாஷ் நாயுடு திரைப்படத்தையும் அவர் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top