தலைநகர் டெல்லியில் தொடர்ச்சியாக விருத்தளிக்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த இந்த வாரம் ராணுவ வீரர்களுக்கான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டு வருகிறது.
நேற்றையதினம் பாகிஸ்தான் விமானத்தை சுட்டுத் தள்ளிய தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஹகில்தார் பழனிக்கும் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
அதன்படி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வீர,தீர செயல்களுக்கான மாவீரர் சக்கர விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கல்வான் மோதலில் உயிர் தியாகம் செய்த கர்னல் சந்தோஷத்திற்கு அறிவித்த மகாவீர் சக்ரா விருதினை அவரது தாயார் மற்றும் மனைவி பெற்றனர்.
கல்வான் மோதலில் வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹகில்தார் பழனிக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் வீர் சக்ரா விருதினை பழனியின் மனைவி பெற்றுக்கொண்டார். இவர்கள் இருவரும் கல்வான் மோதலில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்கள் ஆவர்