
தமிழகம்
கல்லூரிக்கனவு திட்டம்: தமிழக முதல்வர் டுவிட்!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியினை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் துவங்கி வைக்கிறார்.
அப்போது பேசிய முதல்வர் தற்போது நடைபெறும் நிகழ்ச்சியானது தனக்கு புத்துயிர் அளிப்பதாக கூறினார். கல்வியில் தமிழ்நாடு உயர்ந்து இருப்பதால் இதனை மேலும் உயர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.
அதோடு தமிழ்நாட்டில் உள்ள கல்வி கொள்கை வேறெங்கும் இல்லை என கூறினார். இந்த சூழலில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தந்தையாக, உடன்பிறப்பாக இருந்து தமிழக மாணவர்களை அவையத்து முந்தியிருப்பச் செய்யும் முயற்சியான “கல்லூரிக்கனவு” உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வைத் தொடங்கிவைத்தேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும், வாய்ப்புள்ள துறைகளை எல்லாம் வசமாக்கி என உலகை வெல்லும் இளைஞர் படையாக நம் மாணவர்கள் உயர்கல்வியிலும் சாதனைப்படைப்பார்கள் என கூறியுள்ளார்.
