பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. விண்ணை முட்டிய கோவிந்தா கோவிந்தா கோஷம்..!

வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் இறங்கிய நிலையில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது.

ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் என்பதும் இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்பதும் தெரிந்தது. சமீபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் மற்றும் திருத்தேர் ஆகிய நிகழ்வுகள் நடந்த பின்னர் இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.

சற்று முன்னர் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கியதை அடுத்து பக்தர்கள் கரகோஷம் செய்தனர். பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆண்டில் பசுமையான வளம் இருக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காணுவதற்காக மதுரை மாநகரத்தில் இருந்து மட்டுமின்றி சுற்றியுள்ள நகரத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தார்கள் என்பதும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

kallalagar 1சர்க்கரை தீபம் ஏந்தி கோவிந்தா என்ற கோஷத்துடன் கள்ளழகரை பக்தர்கள் வரையற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால் வழக்கத்தைவிட அதிகமாக பக்தர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னர் நூபுர கங்கை திருத்த மூலம் அவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை கள்ளழகருக்கு அணிவித்து பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் பவனி வந்தார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது என்பதும் கருப்பசாமி வேடமிட்டவர்கள் அழகரை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாமரை மலர்களால் நிரப்பப்பட்டு இருக்கும் பகுதியில் கள்ளழகர் சற்றுமுன் எழுந்தருளினார் என்றும் கள்ளழகரை வரவேற்க வீரராகப் பெருமாள் வெள்ளி குதிரையை குதிரையில் வைகை ஆற்றில் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை 5.50 மணிக்கு சரியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கிய அனுபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் என்பதும் கள்ளழகர் ஆற்றில் இறங்கியவுடன் பக்தர்கள் நடனம் ஆடி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற இருக்கும் நிலையில் சுமார் 5000 போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews