கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ம் தேதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாய் குற்றம்சாட்டினார்.

அதே போல் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுக்கப்பட்டனர்.

மேகாலயாவில் நெகிழ்ச்சி!! 50 வயதில் தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்!!

இந்நிலையில் மாணவி மரணம் தொடர்பாக நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக்கோரி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை அமர்வு இன்று வந்தது.

இதில் மாணவிக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உடற்கூறு ஆய்வில் இருந்ததை எடுத்துரைத்தார்.

டெல்லியில் பயங்கரம்! 17-வயது சிறுமி முகத்தில் ஆசீட் வீச்சு!!

அப்போது பேசிய நீதிபதிகள் மாடியில் இருந்து குதித்தால் காயங்கள் ஏற்படும் தானே? என்ற கேள்வியை முன்வைத்தனர். பின்னர் மாணவியிம் மரணம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கும் பள்ளியின் தாளாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.