கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: செல்போனை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

இந்நிலையில் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் விசாரணை சரியில்லை என்றும் அவரது தாய் செல்வி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அதே சமயம் விசாரணைக்காக மாணவி பயன்படுத்தி செல்போன் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இன்று முதல்! கொரோனா தடுப்பூசி திட்டத்தில் நாசி வழி மருந்தும் சேர்ப்பு!!

இதற்கிடையில் வழக்கின் விசாரணை அமர்வானது இன்று மீண்டும் வந்தது. அப்போது பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காவல்துறையினரிடம் செல்போன் ஒப்படைப்பதற்கு பதிலாக அரசு தரப்பு வழக்கறிஞரிடன் ஒப்படைக்க அனுமதி அளிக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதனை ஏற்க முடியாது எனவும் விசாரணை அதிகாரியிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்றும் செல்போனை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைத்தால் எந்த விதத்திலும் பயன்படாது என தனது வாதங்களை முன் வைத்தார்.

கோர விபத்து! காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பலி!!

அப்போது குறுக்கீட்டு பேசிய நீதிபதி குறுக்கு விசாரணை நடைப்பெற்று வருவதால் செல்போனை காவல்துறையினரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் எனவும் தடவியல் சோதனைக்கு அனுப்ப இருப்பதால் தாமதிக்காமல் உடனடியாக ஒப்படையுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.