குற்றவாளிகள் தப்பிக்க துணை போறாங்க – ஸ்ரீமதியின் தாயார் செல்வி ஆவேசம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் விழுப்புரம் தலைமையில் குற்றவியல் நீதிமன்றத்தில் காசி விஸ்வநாதன் மனுதாக்கல் கொடுத்துள்ளார்.

அதில் ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை மற்றும் ஜிம்மர் ஆய்வரிக்கை வேண்டும் என நகல் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் ஸ்ரீமதியின் தாய் செல்வி கூறுகையில் “ ஸ்ரீமதி விவகாரம் ஒருதலைபட்சமாக போவதாகவும்… சிபிசிஐடி, காவல்துறை, நீதிதுறை குற்றவாளிகளை தப்பிக்க வைக்க துணைபோகிறார்கள்” என கூறியுள்ளார்.

உண்மைகள் கொட்டிக்கிடந்தும் தெரியாது போல் நடப்பதாகவும்… இந்த விசாரணையை வைத்து பழைய கொலைகளை தோண்டி எடுத்திருக்கலாம்.. பள்ளி தாளாளர் கேட்பதற்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் சிபிசிஐடி விசாரணை சரியில்லை என்று அவரது தாய் குற்றச் சாட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.