கள்ளகுறிச்சி பள்ளி கலவரம்: 5 யூடிப்பர்களுக்கு ஆப்பு வைக்கும் புலனாய்வு போலீஸ்

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டத்­தில் சின்­ன­சே­லம் அடுத்­துள்ள கனி­யா­மூர் சக்தி மெட்­ரிக் பள்ளி விடு­தி­ யில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜீலை மாதம், 13ஆம் தேதி தரைத்­த­ளத்­தில் இறந்துகிடந்­தார்.

மகள் இறப்­பில் சந்­தே­கம் இருப்­ப­தாக, ஸ்ரீம­தி­யின் பெற்­றோர் புகார் தெரி­வித்து, மறி­யல் போராட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர். பிரேத   பரி­சோ­தனை முடிந்த பிற­கும், ஸ்ரீம­தி­யின் உடலை வாங்க மறுத்து உயர்­நீதி மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்­த­னர்.

இதன் தொடர்­பில் ஜீலை 17ஆம் தேதி நடந்த போராட்­டம், பெரும் கல­வ­ர­மாக மாறி­யது. இதில், பள்ளி, காவல்­துறை வாக­னங்­கள் மற்­றும் பள்­ளி­யில் உள்ள ஆவ­ணங்­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்­டது. இது குறித்த வழக்­கு­களை சிறப்பு புல­னாய்­வுக் குழு காவல்­துறை விசா­ரித்து      வரு­கின்­றது.

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து யூடிப்பர்கள் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னிலையில் நேரில் ஆஜர்

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 25-க்கும் மேற்பட்ட யூடிப்பர்கள் மீது கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குற்றவியல் நடைமுறை சட்டம் படி சம்மன் அனுப்பியதன் பெயரில் சம்பந்தப்பட்ட சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல், சென்னை பகுதியை சேர்ந்த முகம்மது ஷபி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய ஐந்து பேரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment