கள்ளக்குறிச்சி பள்ளி மீண்டும் திறப்பு: ஆர்வத்துடன் வகுப்பறைக்குள் சென்ற மாணவர்கள்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் ஜூலை 11-ஆம் தேதி ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஜூலை 17-ம் தேதி பள்ளியின் வன்முறை வெடித்து பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டு தீக்கறையாக்கப்பட்டது. இந்த சூழலில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மகள் கண் முன்னே தந்தை பலி: ராஜஸ்தானில் பரபரப்பு!!

இதனிடையே மாணவர்களை வரவேற்கும் விதமாக நுழைவாயில் முன் வாழைமரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளியின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைப்பெறுவதாகவும், மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையில் அதிமுக! முன்னாள் அமைச்சர் காரசார பேட்டி..!!

மேலும், வரும் காலங்களில் கூடிய விரைவில் பள்ளி திறக்கப்பட வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.