கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் டிசம்பர் 5 முதல் ஒரு மாதத்திற்கு திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் ஜூலை 13ஆம் தேதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டக்காரர்கள் தனியார் பள்ளியை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல் சூறையாடினர். இந்த சூழலில் பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

ரெடியா இருங்க! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை அப்டேட்!!

இதற்கிடையில் வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்த நிலையில் சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி மாணவி மரணம் தொடர்பான புலன் விசாரணையை முடித்து 3 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அதே சமயம் மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுதியானது எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் செயல்பட்டு வந்ததாகவும், புலன் விசாரணையில் முழுமையான ஆதாரங்களை சேகரிக்க முடியாது என்பதால் வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் விடுதி நடத்தும் திட்டம் எங்களுக்கு இல்லையென்றும் அரையாண்டு தேர்வு நெருங்கி வருவதால் வகுப்புகளை நடத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

கோகுல் ராஜ் கொலை வழக்கு: சுவாதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ அரசு, பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தரப்பில் பள்ளியை திறப்பதற்கு எந்த ஒரு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதால் 3-வது தளத்தினை தவிர்த்து, 2 மாடிகளில் மட்டும் டிசம்பர் 5 முதல் ஒரு மாதத்திற்கு 9 முதல் 12 வகுப்பு வரையில் பள்ளியை திறக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

மேலும், பள்ளியின் பாதுகாப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.