Connect with us

கள்ளக்குறிச்சி கலவரம் – பள்ளி பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்த இளைஞர் சரண்

kallakurichi school

செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம் – பள்ளி பேருந்துகளை டிராக்டர் மூலம் இடித்த இளைஞர் சரண்

கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது டிராக்டர்கள் கொண்டு பள்ளி பேருந்துகளை சேதப்படுத்திய வாலிபர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார் ; 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கடந்த ஜூலை 13-ம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.தொடர்ந்து ஜீலை 17-ம் பள்ளி மாணவி ஸ்ரீ மதியின் மரணத்திற்கு நீதிக்கேட்டு பள்ளியின் முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது.

மேலும் பள்ளியின் உள்ளே நுழைந்த கலவரக்காரர்கள் பள்ளியின் பேருந்துகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.

இந்த சம்பவத்தில் பள்ளியின் உள்ளே டிராக்டரை எடுத்துக்கொண்டு பள்ளியின் பேருந்துகள் மீது மாறி மாறி மோதி பேருந்துகளை டிராக்டரால் நொறுக்கிய பங்காரம் கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வீடியோ ஆதாரங்களை வைத்து தேடி வந்த நிலையில்

ஜெயவேல் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்பு சரணடைந்தார். தொடர்ந்து குற்றவாளி ஜெயவேலை 15 நாட்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top