Connect with us

கள்ளக்குறிச்சி கலவரம்: பள்ளி நிர்வாகிகள் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தனர்..!

Kallakuruchi school admin 31 08

செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்: பள்ளி நிர்வாகிகள் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தனர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதி சக்தி மெட்ரிக் பள்ளி, பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தனர்……

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த பனிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளித் தாளாளர் ரவிக்குமார், தலைமை ஆசிரியர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, வேதியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே ஜாமின் கோரி இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நிபந்தனை அடிப்படையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனியாமூர் பள்ளியின் செயலாளர் சாந்தி, ஆசிரியர்கள் ஹரிப்பிரியா மற்றும் கிருத்திகா ஆகியோர் காலை 7:30 மணியளவில் பெண்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.

இதேபோல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் இருவரும் சேலத்திலேயே தங்கி கையெழுத்து இடவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் பள்ளி ஆசிரியைகள் ஹரிப்பிரியா மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் சேலத்தில் தங்கி சேலம் மாநகர் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top