கனியாமூர் பள்ளி கலவரத்திற்கு வன்மத்தை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பியது, போலீஸ் வாகனம் மீது கல் வீசியது தொடர்பாக மேலும் 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த ஜுலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.
கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ் அப் குழுவில் வன்மத்தை தூண்டும் வகையில் பதிவு செய்ததோடு கலவரம் ஏற்பட காரணமாக இருந்து கலவரத்திலும் பங்குபெற்ற கடலூர் மாவட்டம் நல்லூர் நகரை சேர்ந்த அசோக்குமார் மற்றும் போலீசார் வாகனத்தின் மீது கல் எறிந்தும் காவலர்கள் மீது கல் எறிந்து வன்முறையில் ஈடுபட்டதாக சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தை ச் சேர்ந்த ராம்குமார் , விஜயராஜ் ஆகிய மூன்று பேரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு ஆஜர்படுத்தினர் .
இதனை அடுத்து குற்றவாளிகள் 3 பேரையும் 15 நாட்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.