Connect with us

கள்ளக்குறிச்சி கலவரம்: WhatsApp மூலம் அழைத்த மேலும் இரண்டு பேர் கைது!!

kallakurichi 16580395713x2 1

தமிழகம்

கள்ளக்குறிச்சி கலவரம்: WhatsApp மூலம் அழைத்த மேலும் இரண்டு பேர் கைது!!

கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் பள்ளியில் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும் கலவரம் ஏற்பட்டது.

மேலும் பள்ளி வாகனங்களை பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர். இதனால் பெரும் பரபரப்பு அந்த பகுதியில் ஏற்பட்டது. இது தொடர்பாக தீவிர விசாரணையும் காவல்துறையும் நடத்தியது. மேலும் வாட்சப் குழுக்கள் மூலமாக கலவரத்தை தூண்டும் போதுமான கருத்துக்களை பதிவிட்டவர்களை தொடர்ந்து தேடி கண்டுபிடித்து கைது செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் மேலும் இரண்டு பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான வழக்கில் வாட்ஸப் மூலம் பலரை அழைத்ததாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ஞானப்பிரகாசம், வல்லரசு ஆகியோர் கைதானது அடுத்து மொத்தம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top