Connect with us

கள்ளக்குறிச்சி கலவரம்: வாட்ஸ் அப்பில் கலவரத்தை தூண்டும் கருத்து-மேலும் நாலு பேர் கைது!!

kallakurichi 16580395713x2 1

தமிழகம்

கள்ளக்குறிச்சி கலவரம்: வாட்ஸ் அப்பில் கலவரத்தை தூண்டும் கருத்து-மேலும் நாலு பேர் கைது!!

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்   உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதனால் அங்கு சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்கள் பள்ளியை அடித்து நொறுக்கினார். மேலும் பள்ளியின் வேன்களுக்கு தீ வைத்து எரித்தனர்.

இதனால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் அதன் பின்பு மாணவியின் உடல் மறுபிறாத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

இந்த விசாரணையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேரை கைது செய்துள்ளது சிறப்பு புலனாய்வு குழு.

கலவரத்தை தூண்டும் கருத்துக்களை வாட்ஸ் அப்பில் பதிவிட்டதாகவும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் நாலு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த லோகேஷ், சின்னசேலம் தாலுகாவை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி தாலுகாவை சேர்ந்த சூர்யா மற்றும் மணிவாசகம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்ட பின் இதுவரை 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top