கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வழக்கு: ஐகோர்ட் புதிய உத்தரவு!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில் மனு மீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி பொதுநல மனுவில் எந்த தகுதியும் இல்லை என்றும் நியாயமான காரணம் ஏதுமில்லை என கூறினார்.

அதே சமயம் பள்ளி விடுதி அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதால் அரசு ஏற்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதி பொதுநல மனுவை தள்ளுபடி செய்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.