கள்ளக்குறிச்சி கலவரம்: 70 பேருக்கு ஜாமின் வழங்க உத்தரவு!!!

கள்ளக்குறிச்சி மாநிலம் கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி வன்முறையாக வெடித்தது. இந்த கலவரத்தில் ஈடுப்பட்டுள்ள போராட்டக்காரர்களை 3 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

குறிப்பாக வன்முறையில் ஈடுப்பட்டதாக சுமார் 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களை விடுவிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று நீதிபதி பூர்ணிமா தலைமையில் வந்தது.

அப்போது பேசிய நீதிபதி பூர்ணிமா வன்முறை தொடர்பாக ஜூலை 18-ம் தேதி கைதான 77  பேருக்கு ஜாமீன் வழங்க ழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போல் கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 40 பேருக்கும் மேற்பட்ட மனுக்கள் நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், கனியாமூம் தனியார் பள்ளியின் கலவரத்தில் ஏற்கனவே 17 சிறுவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment