
தமிழகம்
கள்ளக்குறிச்சி விவகாரம்: எஸ்.பி-யை தொடர்ந்து ஆட்சியரும் இடமாற்றம்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கடந்த 11-ஆம் தேதி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
இதனிடையே மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அதோடு பள்ளியின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டது.
இதனிடையே பள்ளி நிர்வாகம் சார்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் 15 நாள் காவல் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு பதிலாக ஸ்ரவன் குமார் ஜடாவத் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட எஸ்.பி. பணியிட மாற்றத்தை தொடர்ந்து தற்போது ஆட்சியரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
