
தமிழகம்
கள்ளக்குறிச்சி விவகாரம்: மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி மாற்றம்!!
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாவட்ட கல்வி அலுவலரை மாற்றி பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறையால் அப்பள்ளி முழுவதும் தீக்கறையானது. இதனால் இந்த பள்ளியை சீர்செய்து, வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தீவிர ஏற்பாடுகளை செய்துவருகிறது.
அதே சமயத்தில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில் முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க ஆத்தூர் கல்வி அலுவலர் ராஜு ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் இந்த மாதம் ஓய்வு பெரும் சூழலில் அவருடைய பணி திருப்தி இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் விரைந்து வகுப்புகள் தொடங்க நடிவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
