Connect with us

கள்ளக்குறிச்சி கலவரத்தால் ஏற்பட்ட விளைவு: கலெக்டர் பணியிட மாற்றம்!!

KALLAKURICHI

தமிழகம்

கள்ளக்குறிச்சி கலவரத்தால் ஏற்பட்ட விளைவு: கலெக்டர் பணியிட மாற்றம்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் கலவரம் இடித்தது. ஏனென்றால் கணியாமூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அங்கு பொதுமக்கள், போராட்டக்காரர்கள் என ஒட்டுமொத்தமாக கூடி பள்ளியின் வளாகத்தை அடித்து நொறுக்கினர். மேலும் பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். மேலும் கலவரத்திற்கு காரணமானவர்களை உண்ணிப்பாக கண்டறியவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கூறினார். சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனராக ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் கலவரம் ஏற்பட்ட நிலையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி சிரவண்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தலைமைச் செயலாளர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top