
தமிழகம்
கள்ளக்குறிச்சி விவகாரம்: மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!!
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து கடந்த மாதம் 17-ஆம் தேதி கனியாமூர் பள்ளியில் போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 150க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இத்தகைய செயலால் பள்ளிகள் மீண்டும் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என கூறினார்.
அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது. இந்த சூழலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சின்ன சேலம் அருகே இருக்கும் பள்ளியில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது.
அதோடு மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பினால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
மேலும், அன்றைய தினத்தில் பள்ளி கலவரத்தில் ஈடுப்பட்ட 5 பேரை விசாரிக்க கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் ஒருநாள் அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
