கள்ளக்குறிச்சி விவகாரம்: டிஜிபி அதிரடி உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாணவி 3வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறை வெடித்தது. அதோடு வன்முறையின் போது பல்வேறு பொருட்கள் பள்ளியில் இருந்து சூறையாடப்பட்டு மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரையில் 300-க்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மேலும் 55 போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவில் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக டிஜிபி கூறியுள்ளார்.

அதே போல் சேலம் சரக டிஐஜி தலைமையிலான இக்குழு 3 பிரிவுகளாக செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே 12 துணை ஆய்வாளர்கள் உட்பட 55 போலீசாரை கூடுதலாக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment