Connect with us

கள்ளக்குறிச்சி விவகாரம்: மேலும் 3 பேர் கைது!!

202112131543529179 Tamil News Tamil News Vembakottai near alcohol sales arrest SECVPF

தமிழகம்

கள்ளக்குறிச்சி விவகாரம்: மேலும் 3 பேர் கைது!!

கடந்த ஜூலை 13-ஆம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 3-வது மாடியில் இருந்து மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் கடந்த ஜூலை 17-ம் தேதி போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல் பல்வேறு பொருட்கள் சூறையாடப்பட்டு மற்றும் தீ வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய், துறை பாண்டி மற்றும் அய்யனார் ஆகிய 3 பேர் மேலும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதோடு வன்முறையில் ஈடுபடுவதற்கு 13 நபர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டும் விதமாக நடந்து கொண்டதற்கு  13-பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சூழலில் தற்போது 16-ஆன அதிகரித்துள்ளது.

மாணவி மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top