கள்ளக்குறிச்சி விவகாரம்: மாணவியின் உடலை புதைக்க முடிவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே மாணவியின் உடலை வாங்க அவர்களுடைய பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்றைய தினத்தில் இறுதிச் சடங்கு செய்யவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் மாணவி ஸ்ரீமதியின் உடலானது புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவி ஸ்ரீமதியின் உடலை நல்லடக்கம் செய்ய யாரெல்லாம் வரவேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், 12 மணிக்குள் அடக்கம் செய்யும் நிகழ்வுகள் முடிந்துவிடும் என்றும் மாணவியின் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment