கள்ளக்குறிச்சி பள்ளியை மீண்டும் திறக்கலாமா? – ஐகோர்ட் புதிய உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் மாணவி மரணம் அடைந்ததையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டகாரர்கள் உடைமைகளை தீ வைத்து எரித்து சூறையாடினர்.

இந்த கலவரத்தினால் பள்ளிகள் மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டு விட்டதால் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

6 மாவட்டங்களுக்கு அலெர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை!!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பள்ளி முழுமையான அளவில் எல்.கே.ஜி முதல் வகுப்புகளை தொடங்க தயாராக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே போல் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பள்ளியை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசின் அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

குக்கர் குண்டுவெடிப்பு: மங்களூரு விரைந்த தனிப்படை போலீசார்!!

அப்போது பேசிய நீதிபதி அரையாண்டு, இறுதியாண்டு தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி இருப்பதால் பள்ளியை மீண்டும் திறக்க 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.