Connect with us

கலக்க போவது யாரு’ இயக்குனரின் முதல் திரைப்படம்

Entertainment

கலக்க போவது யாரு’ இயக்குனரின் முதல் திரைப்படம்

f61eb10c59848ae5265af4535f31a89e

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியான ‘கலக்க போவது யாரு நிகழ்ச்சி 7 பாகங்களாக வெளிவந்து மிகப்பெரிய புகழை பெற்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ராஜ்குமார் முதல்முறையாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

‘செயலி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரு நகைச்சுவை கலந்த த்ரில் படம். இந்த படத்தில் தம்பி ராமையா, விடிவி கணேஷ், சிங்கம்புலி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்தர், ஸ்ரீமன், பிரேம், இனியா, தேவதர்ஷினி இவர்களுடன் 5 பள்ளி குழந்தைகள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

ac710fba7cf9191c159af8c3186e3661மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகவுள்ள இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் என்பவர் இசையமைக்கவுள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவும், , அண்டனி படத்தொகுப்பும் செய்யும் இந்த படத்தை ஓசியானோ ஏஜேஆர் சினி ஆர்ட்ஸ் பிரைவைட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top