பழைய சோற்றில் வாழ்க்கைத் தத்துவத்தையே உணர்த்திய கலைவாணர்!

மறைந்த பழம்பெரும் நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணண் பற்றி தெரியாதவர் யாருமில்லை. வெள்ளித்திரையின் முதல் காமெடி நடிகர். தனது கூர்தீட்டப்பட்ட சமூக அக்கறை வசனங்களை காமெடி கலந்து கூறி அன்றைய தலைமுறையை யோசிக்க வைத்தவர். இவரது மனைவி மதுரமும் காமெடியில் கொடிகட்டிப் பறக்க இருவரது காம்போவும் அப்போது ரசிகர்களுக்கு புது விருந்தாக அமைந்தது. இவரையொற்றியே இந்தத் தலைமுறைக்கும் ஏற்ற கருத்துக்களைத் தனது காமெடி மூலம் கொடுத்தவர் நமது சின்னக் கலைவாணர் விவேக்.

பழைய சோற்றின் மூலம் வாழ்க்கைத் தத்துவத்தை என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு சம்பவத்தில் மிக அழகாக எடுத்துரைத்திருப்பார். அதுஎன்ன சம்பவமெனில், ஒருமுறை என் எஸ் கிருஷ்ணன் அவர்களை பார்ப்பதற்கு சினிமாவின் பிரபலம் ஒருவர் அவரின் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பொழுது என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் பழைய சாதத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இடை இடையே “ஆஹா அமிர்தம் போல் அல்லவா இருக்கிறது ” என்றபடி சாப்பிட்டாராம். இதைப் பார்த்த அந்தப் பிரபலம் “என்னங்க பழைய சாதத்தை போய் இவ்ளோ ரசித்து ருசித்து சாப்பிடுகிரீர்கள்” என்று ரொம்ப நக்கல் தொனியில் கேட்க,

அதற்கு என் எஸ் கிருஷ்ணன் அவரிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்து நல்ல பெரிய ஹோட்டலில் பார்த்து அல்லது சின்ன ஹோட்டலோ போயிட்டு எனக்கு ஒரு கப்பு பழய சாதம் வாங்கிட்டு வாங்க” என்று சொன்னாராம். அந்த பிரபலமும் ஒரு 2 மணி நேரம் அங்கே, இங்கே சுத்தி பார்த்துட்டு கடைசியாக வெறும் கையை வீசி விட்டு வந்து என் எஸ் கிருஷ்ணன் அவர்களை பார்த்து சொன்னாராம் “ஐயா எங்கெங்கோ சுற்றி பார்த்தேன் எங்கேயுமே இந்த பழைய சாதம் கிடைக்க வில்லை” என்று.

அப்பொழுது சிரித்துக்கொண்டே என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் “எந்த ஒரு பொருள் காசு கொடுத்தாலும் கிடைக்கவில்லையோ அந்தப் பொருள் ஒரு அற்புதம், அமிர்தம் அதனால்தான் இதை அமிர்தம் என்றேன் என்று கூறினாராம். உடனே அந்தப் பிரபலம் வெட்கி தலைகுணிந்தாராம். உண்மையிலேயே கலைவாணர் என்ற பட்டம் அவருக்கு கச்சிதமாகப் பொருந்தியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.