
News
கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலாட்டா; ஓட்டம் பிடித்த மூத்த அமைச்சர்!
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக காலை 7 மணி முதல் பொதுமக்களை காக்கவைத்திருந்தனர்.
இந்த நிலையில் சுமார் 3 மணிநேரத்திற்க்கு பிறகு வந்த அமைச்சர் சி.வெ.கணேசன் அங்கே கூடி இருந்த பொதுமக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அமைச்சர் நலத்திட்டம் வழங்குவதை நிறுத்தி விட்டு பாதியிலேயே சென்றுவிட்டார்.
இச்சம்பவத்தில் தள்ளுமுள்ளை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி ஆன அமைச்சர் உடனடியாக இடத்தை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் வெளியேறிய பிறகும் கூட்ட நெரிசல் காரணமாக தள்ளு முள்ளு நீடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
