முத்தமிழ் அறிஞரின் நூற்றாண்டு விழா.. காலங்களைக் கடந்த கலைஞர்-100

தமிழ் திரையுலக வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு பெயர் டாக்டர். திரு. கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 80 ஆண்டுகள் அரசியல் வாழ்விலும் இருந்து கோலோச்சியவர்.

கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்தநாள்.

அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் கலைஞர் என்று கேட்பவர்களுக்கு தன்னுடைய ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும் மகளிர்களுக்கும் இவர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் ஏராளம். குறிப்பாக பெண்களுக்காக இவர் கொண்டு வந்த சில நலத்திட்டங்களை நாம் பார்க்கலாம்.

1973 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக காவல் துறையில் மகளிர் பணி நியமனம் செய்தது கலைஞரின் ஆட்சி காலத்தில் தான்.

இந்தியாவின் முதல் முதலாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இது இட ஒதுக்கீடு உண்டு என்று அறிவிப்பு செய்ததும் கலைஞரின் ஆட்சிகள் தான்.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் ஒரு குடும்பத்தின் பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு வேண்டும் என்று பேசினார். தான் பேசியபடியே 60 ஆண்டுகளுக்குப் பிறகு 1990 ஆம் ஆண்டு பரம்பரை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

1989 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்.

1990 ஆம் ஆண்டு ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதி உதவி திட்டம்.

அஞ்சுகம் அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்.

ஈவேரா மணியம்மை நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம் போன்ற ஏராளமான ஏழைப் பெண்களுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் கைம்பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் டாக்டர் கலைஞர்.

கிராமப்புற மகளிர்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற திட்டத்தையும் கொண்டு வந்தார்.

1998 ஆம் ஆண்டு மகளிர் சிறு வணிக கடன் திட்டம்.

1990 ஆம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தவர் இவர்.

பெண்களுக்காக மட்டுமல்லாமல் மாணவர்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல்வேறு நல திட்டங்களையும் சட்டங்களையும் கொண்டு வந்து பலரது வாழ்வை ஒளிமயமாக்கிய டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews