கலைமாமணி விருதுகள்: விசாரணை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு!

நெல்லை வண்ணாரபேட்டையை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் சமுத்திரம். இவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், காந்த 2019-2020ம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளில் சில தகுதியற்றநபர்களும் கலைமாமணி விருது பெற்று உள்ளனர்.

இந்நிலையில் தகுதியற்றவர்கள் பெற்ற கலைமாமணி விருதை திரும்ப பெற வேண்டும். இனிவரும் காலங்களில் முறையான நடைமுறையை பின்பற்றி தகுதியான நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

சிறையில் வெடித்த கலவரம்.. துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழப்பு!

இந்த வழக்கின் விசாரணை அமர்வு இன்று மீண்டும் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் 2019 – 20 ஆண்டு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா ? என்பதை ஆராய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.

அதே போல் முறைகேடு நடந்திருக்கும் பட்சத்தில் புதிய தேர்வு குழு அமைத்து விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.